June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

காமராஜர் குறித்த அவதூறை கண்டித்து பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்

1 min read

Protest against defamation against Kamaraj at Pavurchatram

15.12.2025
காமராஜர் குறித்து அவதூறு பேசும் யுடியுப்பர் முக்தார் மீது நடவடிக்கை கோரி நாடார் சங்கத்தினர் சார்பில் பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முன்னாள் முதல்வா காமராஜர் குறித்து அவதூறாக பேசிய யூடியுப்பர் முக்தாரை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் பாவூர்சத்திரத்தில் நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் சங்க செயலாளர் சேர்மராஜா தலைமை வகித்தார்.

இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அச்சுதன் நாடார்,👆வழக்கறிஞர் சீனி நாடார், விக்னேஷ் கார்த்திக், சித்ரா, கார்த்திகா, அலெக்ஸ் நாடார், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் ச்ஙக உறுப்பினர்கள் குணசேகரன், கனகராஜ், முத்து, சக்திராஜ், திருமலை பாண்டியன், அருண் மற்றும் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *