June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

1 min read

Nellai, Tenkasi District Electricity Consumer Grievance Redressal Meeting

19.12.2025
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டம் நெல்லை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் ஏற்கனவே புகார் கொடுத்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மனுதாரர்களின் புகார் மீது விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தின் தலைவராக திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, மன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ஜெயா மற்றும் வழக்கறிஞர் ரேவதி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் (மக்கள் தொடர்பு அலுவலர்) சங்கர், உதவி மின் பொறியாளர் ஜெபஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *