ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது- தமிழருவி மணியன் பேச்சு
1 min read
I got a cup of pepper rasam from talking to Rajinikanth – Tamilaruvi Manian’s speech
20.12.2025
2009ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்பதை தொடங்கினார் தமிழருவி மணியன். பின்னர் அதை 2022 இல் காமராஜர் மக்கள் கட்சி என மாற்றினார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அவரை போல், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியன் முக்கிய நிர்வாகிகளுடன் காமகவை தமாகாவில் இணைத்தார். அப்போது பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன் கூறியதாவது:
ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. 3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். வெறும் 20 சதவீத வாக்குகளை வைத்து முதல்அமைச்சராக முடியாது. பாஜக, அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜய்யும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். நமது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி விஜய், முதல் அமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா அணிக்கு வர வேண்டும்”
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.