June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் மகா சூலினி துர்க்கா ஹோமம்

1 min read

Maha Choolini Durga Homam at Keelappavur Narasimha Peetham

20/12/2025
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் மகா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெற்றது.

தென்காசி-சுரண்டை சாலையில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிறுத்தம் அருகில் ;ஸ்ரீ ஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் அமைந்துள்ளது. இங்கு தென் தமிழகத்திலேயே; ஸ்ரீ மஹா சூலினி துர்க்கா விக்ரஹ ரூபமாக ஆராதனை நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு மிக்க இப்பீடத்தில் மார்கழி மாத அமாவாசையையொட்டி நேற்று மாலை மஹா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு நவக்ரஹ தோஷம், திருஷ்டி,பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வினை கோளாறுகள் நீங்குவதற்காக நடத்தப்பட்ட இக்ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ;ஸ்ரீ ஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *