June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி

1 min read

Tamil Official Language Law Week Awareness Rally in Tenkasi

20.12.2025

தென்காசி மாவட்டம். இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்   மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்

தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்வாண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒருவார காலம் நடைபெற உள்ளது.

மேலும், ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா கொண்டாடுதல் தொடர்பில் 17:12 2025, 18122025 (ம) 2212.2025 ஆகிய நாட்களில் அரசுப் பணியாளர்களுக்கு கணினிப் பயிற்சி மின்காட்சியுரை. தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், தொழிலாளர் துறையுடன் இணைந்து வணிகநிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி வணிகநிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைக் கொண்டு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

 இதுதவிர கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும். இதுதவிர, அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினை நினைவு கூரும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும். துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கி கொண்டாடப்படும்.

 அதன் அடிப்படையில் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் மூன்றாம் நாளான 19:122025 இன்று பள்ளி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள். தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணி இசிஈஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி மீண்டும் அதே பள்ளியில் நிறைவடைகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் பெ.இளங்கோ, உதவி இயக்குநர் கனகலெட்சுமி, தமிழறிஞர்கள் தமிழ்செம்மல் விருதாளர் முனைவர் பா.வேலம்மாள், முகம்மது அலி, தமிழ்வாணன், ராயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *