June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவனந்தபுரம் அருகே கடையநல்லூர் காரில் தீப்பிடித்து எரிந்தது

1 min read

Car catches fire in Kadayanallur near Thiruvananthapuram

20.12.2025
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த கார் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச்
சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்காக நேற்று இரவு கடையநல்லூர் வாடகை கார் திருவனந்தபுரம் ஏர்போர்ட் சென்றனர் அங்கே பயணிகளை இறக்கி விட்டு திரும்பி வரும்பொழுது திருவனந்தபுரம் செங்கோட்டை மலைச் சாலையில் மடத்தரை என்ற இடத்தில் கார் வந்தபொழுது காரின் இஞ்சினில் இருந்து திடீரென புகை கிளம்பியது .

இதனை பார்த்த கார் டிரைவர் காஜாமைதீன் உடனடியாக கீழே இறங்கினார். அதன் பின்னர் திடீரென கார் தீப்பற்றி கொழுந்து விட்டு எறிந்தது அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர் விமான நிலையத்திற்கு பயணிகளை விட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் சம்பவம் நடைபெற்றதால் காரில் டிரைவரை தவிர மற்ற எவரும் இல்லாதது உயிர் சேதம் இல்லாமல் தப்பினர்.

இந்த தீ விபத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது எலும்பு கூடாக மாறியது. இந்த டிசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *