June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக ஆண்டு விழா ; “மகளே மல்லிகா” புத்தகம் வெளியீடு

1 min read

Book “Magale Mallika” released at Kadayam Thiruvalluvar Kazhagam

29.12.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் 31-வது ஆண்டு விழா 27.12.2025 சனிக்கிழமை மாலை கடையம் நடராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. திருவள்ளுவர் கழக தலைவர் தமிழ்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். கடையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் சீ.முருகேசன் முன்னிலை வகித்தார். கடையம் திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார். அ.அந்தோணிராஜ் ஒரு குறள் சிந்தனை கூறினார்.


ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக செயலாளர் பழ.முத்துப்பாண்டி, அம்பை தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதனை அடுத்து கடையம் பாலன் எழுதிய “மகளே மல்லிகா” என்ற சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.(இதில் 31 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன).
மேலும் கடையம் பாலனுக்கு கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் “வாழ்வியல் சிந்தனை சிற்பி” என்ற விருது வழங்கப்பட்டது.


இதனை அடுத்து மத்திய அரசின் கற்பித்தல் சாதனையாளர் விருது பெற்ற நா.தமிழரசு (இயற்பியல் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர்) அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற எழுத்தாளர், நல்லாசிரியர் ச.மாடசாமி(ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிதவர்) அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பாராட்டு மலர் வழங்கப்பட்டது.
கடையம் ஊராட்சி ஒன்றிய அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 2025ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு நிகழ்வை பணி நிறைவு செய்த மாவட்ட கல்வி அதிகாரி சங்கரநாராயணன் ஒருங்கிணைத்தார்.
அதன்பின் சிவகாசி க.முத்துமணி அவர்களை நடுவராக கொண்டு “உலகியல் வாழ்வு சிறக்க வள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது அறம்போன்றி வாழ்தலே, பொருள் பேணி வளர்த்தலே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
இதில் அறம்போன்றி வாழ்தலே என்ற தலைப்பி்ல் கடையம் பாலன், கோ.அனிதா ஷிபா லில்லி, மு.வேலு ஆகியோரும், பொருள் பேணி வளர்த்தலே என்ற தலைப்பில் இரா.இன்பசேகரன், சங்கரகோமதி என்ற பிரியா, சா.மாடசாமி ஆகியோர் பேசினார்கள்.


திருவள்ளுவர் கழக இணைச் செயலாளர் செ.சோமசுந்தரம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியல் டாக்டர் பரமசிவன், அம்பை திருக்குறள் கல்வி அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் சிவசங்கர், பொருளாளர் புன்னைவன நாறும்பூநாதன், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் சங்கரநாராயணன், பொதிகைத் தமிழ்சங்க இணைச் செயலாளர் கதிர்வேல், தென்காசி மூத்தகுடி மக்கள் சங்கச் செயலாளர் ராமலிங்கம், எழுத்தாளர் இலஞ்சி ஆ.ஆனந்தன், கடையம் திருவள்ளுவர் கழகத் துணைத்தலைவர் க.கோபால், பொருளாளர் நி.இந்திரஜித்து, இணைச் செயலாளர்கள் பெ.சின்னசாமி, ந.குமாரசாமி என்ற ரவி, மதிப்புறு ஆலோசகர்கள் பி.முருகன், கு.பத்மகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *