June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பூஜை

1 min read

Special puja for students at Thoranamalai

29.12.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலையில் பல்வேறு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிறுதோறும் அரசு-வேம்பு மரங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். அதேபோல் சுனை, கன்னிமார் சன்னதி, 27 நட்சத்திர விருட்சங்கள் ஆகியவற்றுக்கு பூஜை நடைபெறும்.
வழக்கம்போல் கடந்த ஞாயிறு (28.12.2025 ) அன்று வழக்கமான பூஜையோடு மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பூஜையும் நடந்தது. தாமரை முருகா அசல்விலை அங்காடி சார்பில் இந்த சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. மாணவ-மாணவிகள் சிறப்பாக படிக்க சரஸ்வதி க்கு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் திருக்குறள் ஒப்புவித்த, பக்தி சுலோகம் சொன்ன மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மதியம் அன்னதானம் நடந்தது.

நிகழ்ச்சியில் லோட்டஸ் முருகன, கராத்தே வேல்முருகன், பி.ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *