June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் திருநங்கைக்கான விருது-ஆட்சியா் தகவல்

1 min read

Award for transgender in Tenkasi district

31.12.2025
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைக்கான விருது பெற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15ம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளதால் தென்காசி மாவட்டத்தில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awardstngov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து இரண்டு கருத்துருக்கள் (Proposal 2 copies தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் வடிவில்) தென்காசி மாவட்ட சமூகநல அலுலரிடம் நேரடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு இணையதளம் மூலமாக 31.12.2025 அன்று முதல் 18.02.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல்கிஷோர், தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *