July 25, 2026

Seithi Saral

Tamil News Channel

இராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்- ஆட்சியர் ஆய்வு

1 min read

Development project works in Rayagiri and Vasudevanallur areas – Collector inspects

31.12.2025
தென்காசி மாவட்டம் இராயகிரி வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே.கமல்கிஷோர் பேரூராட்சி துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பின் கீழ் வடக்கு ரைஸ் மில் தெரு மற்றும் காளியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிகளையும், 15-வது நிதி ஆணையம் 2024 – 2025 ஆம் நிதி ஆண்டில் சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணிகளையும். 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும். தொடர்ந்து. வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் 2025 2026 ஆம் நிதி ஆண்டில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கலைஞர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் தார் சாலை மற்றும் பாலம், தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் இராயகிரி பேரூராட்சி பொறியாளர் சிவக்குமார் மற்றும் அரசுஅலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *