June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை சிறுவனுக்கு தவறான மருந்தை பரிந்துரை செய்த டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

1 min read

Doctor fined Rs. 25,000 for prescribing wrong medicine to Nellai boy

31.12.2025
நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த சிறுவனுக்கு தவறான மருந்தை பரிந்துரை செய்த மேலப்பாளையம் டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது.

நெல்லை கொக்கிரகுளம் நேதாஜி சாலையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவரது மகன் மத்தீஷ் ராஜா(வயது 9). இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடது கண் ணில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கண்ணில் சிகிச்சை பெறுவதற்கு மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பாலமுருகன் தனது மகனை அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த குழந்தைகள் நல மருத்து வர், சிறுவனை பரிசோதனை செய்து விட்டு குழந்தைக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்னைக்கு கண்ணில் ஊற்ற வேண்டிய மருந்துக்கு பதிலாக காதில் ஊற்ற வேண் டிய மருந்தை தவறாக பரிந்துரை சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விவரம் அறியாத பாலமுருகன் அதனை அங்குள்ள மெடிக்கலில் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று தனது மகனின் கண்ணில் அந்த மருந்தை ஊற்றியுள்ளார்.

இதனால் குழந்தைக்கு கண் எரிச்சல் அதிகமாகி குழந்தை வலியால் துடித்துள்ளார். பின்னர் குழந்தையின் வீட்டின் அருகில் உள்ள மருந்தகத்தில் கேட்டபோது அது காதுக்கு ஊற்றக்கூடிய மருந்து என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த மருந்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து குழந்தைக்கு ஏற்பட்ட வலியை சரி செய்துள்ளார்.

குழந்தையின் தந்தை பாலமுருகன் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் பாளையங்கோட்டை வக்கீல்களான செய்யது அஜீஸ் மற்றும் முஹமது ஷா ஆகியோர் மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் பாலமுருகனுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.25 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க டாக்டருக்கு உத்த ரவு பிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *