June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கள் திடீர் மாற்றம்

1 min read

Sudden change of SPs in Tenkasi, Nellai and Thoothukudi districts

31.12.2025
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி,மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டபுதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஜி.எஸ்.மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தோஷ் ஹதி மானி சேலம் சரக டிஐஜி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் – 2 கமாண்டராக பணிபுரிந்த மணிவண்ணன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகரின் புதிய போலீஸ் கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நெல்லை சரக போலீஸ் டிஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் செ.அரவிந்த் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஜி.எஸ்‌.மாதவன் தென்காசி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், தூத்துக்குடிக்கும் நெல்லை மாநகர துணை கமிஷனராக பணியாற்றி வந்த பிரசன்ன குமார் நெல்லை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மத்திய அரசு பணிக்கு செல்கிறார் அதேபோல் தூத்துக்குடி மாநகர போலீஸ் துணை கண்காணிப்பாளர் மதன் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதோடு தென்மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *