August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தீஷ்காரின் முதல் நக்சல் இல்லாத கிராமம் அறிவிப்பு

1 min read

Chhattisgarh’s first Naxal-free village declared

4.1.2026
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பதேசெட்டி என்ற கிராமம் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட முதல் கிராமம் என வரலாறு படைத்து உள்ளது.

இதனால், துப்பாக்கி குண்டு சத்தமோ, அதுபற்றிய அச்சமோ இருக்காது என்பதுடன் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயமும் தொடங்குகிறது.

முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் தலைமையிலான அரசு, ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.1 கோடி சிறப்பு வளர்ச்சி தொகுப்பு நிதி பற்றி அறிவிப்பு வெளியிட்டார். இதில் பதேசெட்டி கிராமம் முதன்முதலாக பயனடைந்து உள்ளது. நக்சலைட்டுகள் இல்லை என்ற நிலையை அடைந்த இந்த கிராமத்திற்கு ரூ.1 கோடி சிறப்பு நிதி கிடைக்கும். இதன் உதவியுடன், சாலைகள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

இந்த முயற்சியானது, கிராமத்தினருக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே ஒரு நம்பிக்கையை மீண்டும் உருவாக்க உதவியுள்ளது. இதுபற்றி பஸ்தார் ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் கூறும்போது, சுக்மா மாவட்டத்தில் உள்ள பதேசெட்டி கிராமம் நக்சலைட்டுகள் தாக்கம் இல்லாத முதல் கிராமம் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால், வளர்ச்சி பணிகள் சீராக நடந்து வருகின்றன. மற்ற கிராமங்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *