June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல்-நீக்கம் செய்திட முகாம்

1 min read

Camp for new voter registration and deregistration in Tenkasi district

5.1.2026
தென்காசி மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கல் பிழை திருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் கடந்த 27.12.2025, 28.12.2025,03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6- 22,629 மற்றும் ஆட்சேபனைக்கான படிவம் 7-236 மற்றும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 86818 ஆகிய எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது.

மேலும், 01.01.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய உறுதி மொழிப் படிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து அளித்திடலாம். இணைய வழியிலும் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, வாக்காளர்கள் பெயரினை சேர்த்திடவும். பெயர் திருத்தம் மற்றும் புகைப்படம் திருத்தம் இருப்பின் அதனையும் செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி படிவம் 9, 10 மற்றும் 11ஆகியவற்றை வழங்கியுள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு என தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *