June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

1 min read

Secondary school teachers’ strike enters 17th day in Chennai

11.1.2026
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 17வது நாளாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி 17வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இன்றும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *