கடையம் மதுபானக் கடையில் தகராறு- மினிபஸ் டிரைவர் மண்டை உடைப்பு
1 min read
Minibus driver suffers skull fracture in Kadayam liquor shop brawl
18.1.2026
தென்காசி மாவட்டம், கடையம் – தென்காசி சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைக்கப்பட்டது இதில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாசுகி நகர் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் சுவேக் (வயது 30) இவர் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடையம் -தென்காசி சாலையில் தனியாருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது கீழக்கடையம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது 23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்துள்ளார். இதில் சுவேக்கின் மண்டை உடைந்து பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பலத்த காயமடைந்த சுவேக் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .இது குறித்து சுவேக் அளித்த புகாரின் அடிப்படையில் கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவேக்கை தாக்கிய சரவணக்குமாரை கைது செய்தனர்.
அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.