June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துகிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

1 min read

Muthukrishnaperi Panchayat Council’s new office building inaugurated

18.1.2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்,
முத்துகிருஷ்ணபேரியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை திறந்து வைத்தார்.

கீழப்பாவூர் ஊராட்சிஒன்றியம், முத்துகிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடமத்தை கீழப்பாவூர் ஊராட்சி ஒyன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை தலைமை வகித்து திறந்து வைத்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முத்துக்கிருஷ்ணப்பேரி ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன்பாண்டியன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ஜெயராணி மாரிமுத்து, சிவபெருமாள், தங்கஒளிவு தங்கவேல், மகேஸ் பெரியசாமி, அம்பிகா கணபதி, சிவபெருமாள், பரமேஸ்வரி பெரியசாமி, மாரித்தாய் ராமசாமி, திமுக இளைஞரணி அமைப்பாளர் கோமு, ஊர் நிர்வாகிகள் பெரியசாமி, சக்திவேல், சத்தியராஜ், அரிகிருஷ்ணன், செந்தில், மகேந்திரன், வல்லாளராஜா, மா.ராமசாமி, கா.ராமசாமி, சுப்பிரமணியன், வேல்ராஜ், தர்மராஜ், நடராஜன், தங்கபாண்டி. மாரிமுத்து, ஜெயகாந்த், சங்கர், சிமியோன், விஜயஹரி, பதித்ரா, சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துக்கிருஷ்ணப்பேரி ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *