தை அமாவாசை- குற்றாலத்தில் புனிதநீராடல்
1 min read
Thai Amavasya – Holy Bath in the Courtallam
18.1.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்,தைஅமாவாசையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய பக்தர்கள் குவிந்தனர்
குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் மக்கள் குவிந்து புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து , குடும்ப நலன் மற்றும் பித்ரு தோஷ நிவாரணத்திற்காக சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித தலங்களில் குவிந்தனர்.குறிப்பாக, குற்றாலம், பாபநாசம் மணிமுத்தாறு, கன்னியாகுமரி இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன.
தை அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த புண்ணிய பலனை தரும் என நம்பப்படுகிறது. இதனையொட்டி, நேற்று அதிகாலையிலேயே குற்றாலம் பாபநாசம் மணிமுத்தாறு கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்டஇடங்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த புண்ணிய பலனை தரும் என நம்பப்படுகிறது. இதனையொட்டி, இன்று அதிகாலையிலேயே ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், கோவை மாவட்டம் பேரூரில் உள்ள நொய்யல் ஆற்றுப்படித்துறையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேதமந்திரங்கள் முழங்க, அரிசி, பூ, தர்ப்பை புல், எள் உள்ளிட்டவற்றை வைத்து முன்னோர்களை நினைத்து வழிபட்டு, பின்னர் சூரிய பகவனுக்குஅர்ச்சனை. செய்தனர். அதன் பிறகு, பக்தர்கள் பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.