ஆலங்குளம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது
1 min read
Panchayat president’s husband arrested near Alankulam
24.1.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலை ஊழியரை செருப்பால் அடித்ததாக ஊராட்சித் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் அருகே சிவலார்குளம் கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்லும் பாதை தொடர்பாக
ஊராட்சித் தலைவர் வள்ளியம்மாளின் கணவர் கதிர்வேல் முருகன்(வயது 52) என்பவருக்கும், காற்றாலை நிறுவனத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காற்றாலை நிறுவன மேலாளர் வெங்கடேஷ் என்ற பாலாஜிக்கும் கதிர்வேல் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கதிர்வேல் முருகன், வெங்கடேஷ் என்ற பாலாஜியை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வெங்கடேஷ் என்ற பாலாஜி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கதிர்வேல் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.கதிர்வேல் முருகன் திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.