June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தீஸ்கரில் இரவோடு இரவாக இரும்பு பாலத்தை திருடிச் சென்ற கும்பல்

1 min read


Gang steals 40-year-old iron bridge overnight in Chhattisgarh

25/1/2026
சத்தீஸ்கர் மாநிலம் கோர்வா நகரில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒன்றை மர்ம நபர்கள் ஒரே இரவில் துண்டு துண்டாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.

40 ஆண்டு பழமையான பாலம் ஜனவரி 16-ந் தேதி இரவு 11 மணி வரை அங்கு தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சுமார் 15 பேர் கொண்ட திருட்டு கும்பல், Gas cutter- உபகரணங்களை பயன்படுத்திப் இரவோடு இரவாக பாலத்தை சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பாலின் சில இரும்புத் துண்டுகளையும் போலீசார் ர் மீட்டுள்ளனர்.

முன்னதாக 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *