குற்றாலம் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம்.
1 min read
Premalatha Vijayakanth’s darshan at the Courtallam temple
29.1.2026
தென்காசி மாவட்டம் , குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன்.தீபமேற்றி மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த் மாவட்டத்தில் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படும் குற்றாலநாதர் கோவிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். உடன் அவரது மகன் விஜய பிரபாகரனும் வருகை தந்த நிலையில் குற்றாலநாதர் சன்னதி, குழல் வாய்மொழி அம்மன் சன்னதி, பராசக்தி பீடம் உள்ளிட்டா ஒவ்வொரு சன்னதிகளிலும் மனம் உருகி நேரம் செலவழித்து பொறுமையாக சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து குற்றாலநாதர் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டார்.
பீஹாரில் பெண்களுக்கு ஜாக்பாட்: உதவித்தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
இது குறித்து முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து அதிகாரம் அளிக்க முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தன்னை ஒரு தொழில்முனைவோராக்க மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கான நிதி உதவி வழங்குவதாகும்.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளதுகூடுதல் நிதி உதவி வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னர் வழங்கப்பட்ட நிதி வேலைவாய்ப்புக்காக திறம்பட பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தத் தொகை பாதி பாதியாக வழங்கப்படும்.