உடல்தானம் செய்த நல்லாசிரியருக்கு கடையத்தில் இரங்கல் கூட்டம்
1 min read
Condolences pour in for teacher who donated his body
29.1.2026
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சேவாலயா அறக்கட்டளையின் சார்பில் மறைந்த நல்லாசிரியர் ஆர்.எஸ். நல்லப்பெருமாளுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ். நல்லபெருமாள். நல்லாசிரியர் விருது பெற்ற இவர் தனது பெயருக்கேற்ப தனது வாழ்நாளில் பல்வேறு சமூகநலப் பணிகளை செய்தவர். இவர் தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை சேவாலயா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து அதன் மூலமாக பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சமூகநல சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இவர் கடந்த 10-01-2026 அன்று சென்னையில் காலமானார். அவரது விருப்பப்படி ராமசந்திரா மருத்துவ கல்லூரிக்கு அவருடைய உடல் தானமாக வழங்கப்பட்டது. அவருக்கு இரங்கல் கூட்டம் கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேவாலயா அறக்கட்டளை நிறுவனர் முரளிதரன், காஞ்சனா, திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் சேதுராமலிங்கம், செயலாளர் கல்யாணி சிவகாமிநாதன், இந்திரஜித், கோபால், சோமசுந்தரம், அருணாச்சலம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் முருகன், சுடலை, நூலகர் மீனாட்சி சுந்தரம், ஹரிஹரசுப்பிரமணியன், ரோகினி கணேசன், சுப்பிரமணியன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சேவாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார் நன்றி கூறினார்.
மேலும், ஆர்..எஸ். பெருமாள் நன்கொடையாக அளித்த வீடு தற்போது புதியதாக கட்டபட்டு வருகிறது. பணி நிறைவடைந்தவுடன் தென்மாவட்டங்களில் தனது கல்வி மற்றும் சமூகநலப் பணிகளை விரிவாக்க சேவாலயா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக நிறுவனர் முரளிதரன் தெரிவித்தார்.