June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பொதிகை புத்தகக் திருவிழா – சுவர் ஓவியம் மூலம் அழைப்பு.

1 min read

Pothikai Book Festival in Tenkasi – Invitation through wall painting

29.1.2026
தமிழ்நாடு அரசும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கமும் இணைந்து 4வது பொதிகை புத்தகக் கண்காட்சியை இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜனவரி 30ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 8 ஞாயிற்றுக் கிழமை வரை 10 நாட்கள் நடத்துகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ‌.கே.கமல்கிஷோர் செய்து வருகிறார்.

இது குறித்து பொதுமக்கள் , வாசகர்கள். பள்ளிக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் அறிந்து கொண்டு, வாசிப்பை நேசிக்க, புத்தகத் திருவிழாவிற்கு வருகை தர வேண்டி அழைக்கும் விதமாக இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஓவியக்கழக மாணவர்கள் தருண், கிஷோர், மனோஜ், செல்வா, ஹரி கோவிந்த ராஜா, அனுசியா, சுபஸ்ரீ, ராஜஸ்ரீ, பால முரளி, நித்தீஷ் கல்யாண, முத்ரா, தேவி பாலா, தங்க முருகன் , மாலிக் ஆகியோர் ஓவிய ஆசிரியர் கணேசன் வழிகாட்டுதலில் வரைந்தனர்.

இந்த நிகழ்விற்கு தலைமை இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் நிர்வாக இயக்குநர் மாரியப்பன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலரும் பள்ளி ஆசிரியருமான சுரேஷ் குமார் ஒருங்கிணைத்தார்.

புத்தக திருவிழா விழிப்புணர்வு ஓவியத்தை திறந்து வைத்து பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் ரேணுகா அவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் கண்ணன், பள்ளிச் செயலர் ஐ.சி. சண்முக வேலாயுதம் ஆகியோர் ஓவியம் வரைந்த மாணவர்களைப்பாராட்டினர்.பள்ளிக்கல்வித் துறை சார்பில் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைத்தனர்..

மேலும் நாள்தோறும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள், இலக்கிய உரை வீச்சுக்கள் நடைபெறும்.
நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் மூக்கையா , பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளித்துணை ஆய்வாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் முறையான சந்தைப்படுத்தலை உறுதி செய்ய துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பயனாளிகள் ஆடை உற்பத்தி, சமையலறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளுடனும் இணைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பெண்களின் நிலையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்திற்குள் சிறந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *