தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்- பிரதமர் மோடி பதிவு
1 min read
Self-confidence makes everything possible – PM Modi posts
3.2.2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்திருந்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
அதேவேளை, இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறைத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா மீதான வரியை குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரங்களில் தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
தன்னம்பிக்கை ஒரு சக்தி. தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும். தைரியம், தன்னம்பிக்கையின் மூலமே செல்வ வளத்தை பெருக்க முடியும். திறமை, செயல்திறன், ஒழுக்கம் பாதுகாக்கப்படும்போது அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது
இவ்வாறு தெரிவித்துள்ளார்.