October 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பை அருகே லாரி – அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் பலி

1 min read

Conductor killed in collision between lorry and government bus near Ambai.

8.10.2026
நெல்லையில் இருந்து அம்பைக்கு இன்று காலை அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. கோபாலசமுத்திரம் அருகே பிராஞ்சேரி – கொழுமடை பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரியும் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டன. இதில் இரு வாகனங்களின் முன்பகுதிகளும் நொறுங்கிப் பலத்த சேதமடைந்தன.

விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளுக்குள் சிக்கி அலறியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி பஸ் கண்டக்டர் கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் கொடுமூட்டி பகுதியை சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள்
5 – க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக நெல்லை – அம்பை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோபாலசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *