தென்காசி தம்பதியினர் தேக தானம் செய்தனர்
1 min read
A couple from Tenkasi donated their bodies.
8.10.2026
பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு தலைமை பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த ததையொட்டி தென்காசியில் சேவா வாரம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது
இதனையொட்டி தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முன்னாள் பாஜக நகர் மன்ற உறுப்பினர் சு.கருப்பசாமி உதவியுடன் தென்காசி கீழப்புலியூர் பகுதியைச் சார்ந்த ஶ்ரீமான் ஆர்.ரெங்கசாமி ஐயர் – ஶ்ரீமதி ஆர்.ஜானகி ரெங்கசாமி தம்பதியர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று தேகதானம் வழங்க படிவம் பெற்று கையெழுத்திட்டு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லினிடம் வழங்கி தேகதானம் கொடுத்தார்கள்.
தேகதானம் செய்த தம்பதிகள் ஆர்.ரெங்கசாமி ஐயர், ஆர் ஜானகி ரங்கசாமி, ஆகியோருக்கு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் மற்றும் பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சு.கருப்பசாமி ஆகியோர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.