October 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பெத்தநாடார்பட்டி பெரியம்மன் கோவில் கொடை விழா

1 min read

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 90; hdrForward: 6; shaking: 0.000000; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.1300,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:07 17:15:41; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 272.19434;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 41;zeissColor: bright;


Pethanadarpatti Periyamman Temple Kodai Festival

8.10.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
பெத்தநாடார்பட்டி ஸ்ரீபெரியம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீபெரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை அன்னதானமும், இரண்டாம் நாள் (திங்கள்கிழமை) மாலை திருவிளக்கு பூஜை, இரவு அம்மன் சப்பரம் வீதி உலா வருதலும் நடைபெற்றது. 3ம் நாள் (செவ்வாய்) மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், சிறப்பு பூஜையும், இரவு பொங்கலிடுதல், நள்ளிரவு கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியன நடைபெற்றன.

4ம் நாளான நேற்று (புதன்கிழமை) நண்பகல் முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் பாரம்பரிய ஒடுக்கு பானை எடுத்து வருதலுடன் விழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பெரியம்மன் கோவில் வரிதாரர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *