தென்காசி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்குவிண்ணப்பிக்கலாம்
1 min read
Applications are invited for the post of Tenkasi Block Coordinators
8.10.2026
தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் (ஆலங்குளம் -1 கடையம்-1, கீழப்பாவூர் -1 மற்றும் செங்கோட்டை-1) வட்டார அளவிலான கூட்டமைப்புகளால் வழங்கப்படும் தகுதியான நபர்கள் மூலம் வெளியாதார முறையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் ஏதாவது ஒரு பிரிவில் பெற்றிருக்க வேண்டும். மூன்று மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினியில் பட்டபடிப்பு பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருந்தல் வேண்டும்
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்திருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும் (ஓட்டுநர் உரிமம்) நற்சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாநில அளவிலான திட்டங்களில் பணிபுரிந்து பணிநீக்கம் மற்றும் நிதி தொடர்புடைய குற்றங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க கூடாது.
தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் சம்பந்தப்ட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் 07.10.2026 முதல் 16.10.2026 அன்று மாலை 5 வரை சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.