June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளத்துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படும்

1 min read

Agriculture and dairy sectors will be fully protected in the US agreement

4.2.2026
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால்வள துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த 50 சதவீதம் வரி என்பதை 18 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பல அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமானவை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந் நிலையில் லோக்சபாவில், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால்வளம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *