August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

1 min read

2 Pakistani terrorists killed in Jammu and Kashmir

4.2.2026
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
படையினரின் ட்ரோன் கண்காணிப்பு கண்டு உஷாரான பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்திலிருந்து இருந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொல்லப்பட்ட வர்களில் ஒருவன் அவு மாவியா. இவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோஷ்டி தலைவனாக, கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவன்.

மற்றொரு பயங்கரவாதி ஜப்பார் என்றும் அடையாளம் காணப்பட்டான். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *