June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தந்தையின் உடலை 11 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்

1 min read

Sons carry father’s body 11 km on bike

11.2.2026
ஆந்திர மாநிலம் பாபட்டலா மாவட்டம் கர்ல பாலம் அடுத்த சித்தைய்யா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். தம்பதிக்கு மனைவி, 3மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நாகேஷ் அங்குள்ள ஏரிக்கரையின் மீது குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று நாகேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது மகன்கள் தந்தையை சிகிச்சைக்காக பாபட்லா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நாகேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தந்தையின் பிணத்தை ஊருக்கு கொண்டு செல்ல ஆஸ்பத்திரியில் இலவச அமரர் ஊர்தி இல்லை. இதனால் ஆட்டோ டிரைவர்களை அணுகினர். அவர்கள் ரூ.3ஆயிரம் கேட்டனர். தங்களிடம் பணம் இல்லாததால், அவர்களது மகன்களுக்கு மரணத்தின் துயரம் ஒரு புறமும், உடலை எடுத்துச் செல்ல பணம் இல்லாத துயரம் மறுபுறம் இருந்தது.

இதையடுத்து சகோதரர் உதவியுடன் தந்தையின் உடலை பைக்கில் நடுவில் வைத்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து பாபட்லா கலெக்டர் வினோத் குமார் கூறுகையில்,

அமரர் ஊர்தி வாங்குவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தங்களிடம் பணம் இல்லை என தெரிவித்து இருந்தால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவி செய்து இருப்பார்கள் என தெரிவித்தார்.

ஆனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் இது சம்பந்தமாக குறைந்தபட்ச உதவிகள் கூட செய்யவில்லை என நாகேஷின் மகன்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *