June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை- மோடி திறந்து வைத்தார்

1 min read

Emergency landing road in Assam – PM Modi inaugurates first landing

14.2.2026
ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அசாம் சென்றுள்ளார். அங்கு திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி வந்த சி-130 விமானம் இந்த அவசர தரையிறங்கும் சாலையில் தரையிறங்கியது. திறப்பு விழாவின் போது போர் விமானங்களின் கண்கவர் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

அவசரக் காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லைக்கு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இதுவே வடகிழக்கில் முதலாவது அவசர கால தரையிறங்கும் சாலை ஆகும்.

போர் காலங்களில் அல்லது அவசர நிலைகளில் அருகில் உள்ள திப்ருகார் விமான நிலையம் அல்லது சாபுவா விமானப்படை தளம் போன்றவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய விமானப்படைக்கு இந்த ஓடுபாதை மாற்றாக இருக்கும்.

மிகவும் வலிமையான கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓடுபாதையில், 40 டன் எடை கொண்ட போர் விமானங்களும் எளிதாகத் தரையிறங்கி மீண்டும் பறக்க முடியும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *