பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரி சென்னைக்கு பணியிடமாற்றம்
1 min read
Enforcement officer who sent notice to senior BJP leader transferred to Chennai
14.2.2026
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தவர் ரவி திவாரி.
இதனிடையே, பாஜக மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியுமானவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (வயது 83). இவரது மகன் ரனீந்தர் சிங்.
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக கேப்டன் அம்ரீந்தர் சிங் அவரது மகன் ரனீந்தர் சிங் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ஜலந்தர் அமலாக்கத்துறை கூடுதல் இயகுனர் ரவி திவாரி விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அம்ரீந்தர் சிங்கிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ரீந்தர் சிங் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அம்ரீந்தர் சிங்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரி ரவி திவாரி இன்று சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரி பணியிடமாற்றம் வழக்கமான நடைமுறைதான் என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.