திருமணத்திற்கு முன்பு எப்படி உங்களால் உடலுறவு கொள்ள முடிகிறது?- உச்ச நீதிமன்றம் கேள்வி
1 min read
How can you have sex before marriage? – Supreme Court questions
17.2.2026
திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.
நீதிபதி நாகரத்னா கூறியதாவது;-
திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களே.
அவர்களது உறவு எவ்வளவு நெருக்கமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் எப்படி உடலுறவில் ஈடுபட முடிகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவேளை நாங்கள் பழமைவாதிகளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் முழுமையாக நம்பிவிடக் கூடாது.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அதன் விளைவுகளைச் சிந்திப்பது அவசியம்”
இவ்வாறு கூறினார்.
மேலும், புகாரளித்த பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதத்துடன் உறவு வைத்ததாக தெரிவதாகக் குறிப்பிட்டனர்.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.