ஜூலையில் புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்வோம்; மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
We will present the budget with new announcements in July; M.K. Stalin’s speech
17.2.2026
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தென்னரசு அவர்கள்!
மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம். ஜூலை மாதம் #திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்.நமது #திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் – ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.