கடையத்தில் குளத்தில் மூழ்கி ஒருவர் பலி
1 min read
One person dies after drowning in pond in Kadayam
தென்காசி மாவட்டம் கடையத்தில் மாடு மேய்க்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலியனார்.
தெற்கு கடையம் கற்பகவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் திருநாம நம்பியார். இவரது மகன் தளவாய் (வயது 52). மாடு மேய்க்கும் தொழில் செய்துவந்த இவர் சம்பவத்தன்று (15-02-2026) கடையம் முதலியார்பட்டி சாலையிலுள்ள அய்யம்பிள்ளைகுளத்தின் அருகில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது குளத்தில் இறங்கிய மாட்டை கரையேற்றுவதற்காக குளத்தில் இறங்கிய தளவாயின் காலில் தாமரைக் கொடி சுற்றியதால் நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், துணை ஆய்வாளர் மாடசாமி மற்றும் காவலர்கள் தளவாயை தீவிரமாக தேடினர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இரவு நேரமானதால் தேடும் பணி தாமதமானது. மறுநாள் (17-02-2026) காலையில் இறந்த நிலையில் தளவாயின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.