June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

வி.கே.புரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இறந்த பெண் குடும்பத்துக்கு நஷ்டஈடு

1 min read

Compensation to the family of the woman who died in a gas cylinder explosion in V.K. Puram

20.2.2026

திருநெல்வேலி மாவட்டம்
விக்கிரமசிங்கபுரம், வம்பளந்தான் பாறை தெரு வில் வசித்து வந்தவர் முருகனின் மனைவி சண் முகம் கடந்த 21.09.2017 அன்று வீட் டில் ஏற்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயம் ஏற் பட்டு உயிரிழந்தார்.வீட்டில் இருந்த இன்டேன் கியாஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக திறந்து கேஸ் வெளியே றிய நிலையில், அதிக மின் அழுத்தம் காரண மாக சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்தது.

தீக்காயமடைந்த சண்முகம் முதலில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ ை श யி ல் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கியாஸ் நிறுவனமும், இச்சம்பவத்திற்கு அதன் விநியோகஸ்தர் ,மின்சார வாரியமும் பிரம்மா செய்த சேவை குறை பாடே காரணம் எனக் குற்றம் சாட்டி, அவரது மகன் கார்த்திக் வழக்கறிஞர் மூலம் (16.08.2019 ) நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் முன்பு வழக்கு தொடர்ந்தார். ஆனால் நிர்வாக கார ணங்களால் வழக்கு திரு நெல்வேலி கூடுதல் நுகர்வோர்குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப் பட்டது. வழக்கை விசா ரித்த தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா, கேஸ் நிறுவனம், விG யோகஸ்தர் மின்சார வாரிய மேற்பார்வை
பொறியாளர் ஆகியோரின் சேவை குறைபாடே சண்முகம் உயிரிழப்பிற் கும் வீடு இடிந்ததற்கும் காரணம் தீர்மானித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழக்கு தாக்கல் செய்த நாள் (16.08.2019) முதல் 9% வட்டியுடன் வழக்கு செலவுக்கு ரூ.10ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.23 .89 லட்சம்/(வட்டியு டன்) சேர்த்து 45 நாட்க ளுக்குள் சண்முகத்தின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *