June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை ஒருங்கினைப்பு கூட்டம்

1 min read

Tenkasi District Forest Department and Police Coordination Meeting

21.2.2026
சட்டவிரோத செயல்பாடுகள் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல், நாட்டுக் குண்டுகள் அவுடு காய் தயாரித்தல் மற்றும் சேமித்தல், கஞ்சா பயிரிடல் கடத்தல் மற்றும் காடு மற்றும் வன விலங்குகள் தொடர்பான பிற குற்றச்செயல்கள் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் காவல் துறை மற்றும் வனத்துறை இணைந்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உளவுத்தகவல் பரிமாற்றம், துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மற்றும் காடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி கூட்டு ரோந்து, திடீர் சோதனைகள், மற்றும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டம் மாவட்ட வன அலுவலர் முனைவர் ரா. ராஜ்மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூடுதலாக, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், வன சரக அலுவலர்கள் வனவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி குற்றாலம் வன விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல், நாட்டுக் குண்டுகள் தயாரித்தல், கஞ்சா தொடர்பான செயல்பாடுகள் மற்றும் வனக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ய பட்டது. மேலும், ஏதேனும் நம்பகமான தகவல்கள் இருப்பின் உடனடியாக காவல் துறை அல்லது வனத்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். தகவல் வழங்குவோரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சட்டம் ஒழுங்கை பேணுதல், வன வளங்களை பாதுகாத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நோக்கில் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறை இனைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *