June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை

1 min read

Local holiday for Tenkasi district on the 4th

24.2.2026
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமி தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194 வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194 வது அவதாரத் திருவிழா வருகின்ற 04.03.2026 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2026 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த 2.बाँ விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.03.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *