June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாஜக பிரச்சார கூட்டம்

1 min read

BJP campaign meeting in Kadayam

25.2.2026
கடையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சேர்வைகாரன்பட்டி பேருந்து நிலையம் அருகே சக்திகேந்திரா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மற்றும் சக்திகேந்திர பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் மேற்கு ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன், மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சங்கர நாராயணன், ஜெயக்குமார் கணேசன், ஒன்றிய பொருளாளர் காக்கும்பெருமாள், ஒன்றிய துணைதலைவர்கள் குமரேசன், ரவிக்குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் அழகுராஜ், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கஜேந்திர வேல்செழியன், தன்னார்வத் தொண்டு பிரிவு மாவட்ட செயலாளர் இசக்கிராஜ், வழக்கறிஞர் தயாள லெட்சுமணன், விவசாய அணி ஒன்றிய தலைவர் ஆத்திசுதர், OBC பிரிவு ஒன்றிய தலைவர் முருகன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய தலைவர் சுரேஷ், கிளைத்தலைவர்கள் அசோக்குமார், பொன்மாரி , ராதாகிருஷ்ணன், நாராயணன் கிளைச் செயலாளர் கனகராஜ், ஹரிகரன் , மாரி, அருள்ராஜ், நிர்வாகி மகேஷ், அதிமுக கிளைச் செயலாளர் கணேசன், கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *