June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் தெற்கு ஒன்றியத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

1 min read

Jayalalithaa’s birthday celebration in Kadayam South Union

25.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியத்தில் பொட்டல்புதூர், பாப்பான்குளம், ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான பி. ஜி. இராஜேந்திரன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இவ்விழாவில்
ஆழ்வார்குறிச்சி அதிமுக பேரூர் பொறுப்பாளர் நெல்லையப்பன், அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், பேரூராட்சி தலைவர் சரசு சங்கர், கிளைச் செயலாளர்கள் மைக்கேல், நாலாயிரம், கனி, ராஜா, நல்லசிவன், ராமகிருஷ்ணன், பாசறை செயலாளர் வேணுகோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் காமாட்சி, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் விக்னேஷ் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *