June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அரியலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை- அன்னதானம்

1 min read


Garland-food donation to Jayalalithaa statue in Ariyalur

25.2.2026
அதிமுக பொதுச் செயலாளர்,எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ். இராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.தொடர்ந்து, மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய தெரு மாரியம்மன் கோவில் ,தென்பகுதி திரௌபதி அம்மன் கோவில்,பெரிய அரண்மனை பிள்ளையார் கோவில்,வ.உ.சி. தெரு முக்கண் மாரியம்மன் கோவில்,மாங்காய் பிள்ளையார் கோவில்,சின்ன கடை தெரு பிள்ளையார் கோவில்,மேலத்தெரு பெரிய நாயகி அம்மன் கோவில் சந்தன மாதா கோயில் தெரு மாரியம்மன்கோவில்,இராஜாஜி நகர் வள்ளலார் கோயில்,
பெரியார் நகர் பிள்ளையார் கோவில்,கோதண்ட இராமசாமி பெருமாள் கோவில், சுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.மேலும், எத்திராஜ் நகர், மணியங்குட்டை தெரு, செந்துறை ரோடு இருசுகுட்டை பகுதி, சிங்காரத் தெரு மாரியம்மன் கோயில் அருகில், விளங்கார தெரு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு முன்பு, கோசி நகர் பிள்ளையார் கோவில் முன்பு, கவரைத் தெரு மாரியம்மன் கோவில் முன்பு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் ,அதிமுக கட்சி கொடியினை ஏற்றிவைத்து, அங்கு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி யினை தொடக்கி வைத்தார்.இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர்.
மன்ற இணைச் செயலாளர்
மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளவழகன், மாவட்ட இணைச் செயலாளர் பவானி வெள்ளைச்சாமி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் வைகோ சிவபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் செல்வ ராசு, பொய்யூர் பாலசுப்பிரமணியன், நகர அதிமுக செயலாளர் ஏ.பி. செந்தில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி. சங்கர், இணைச் செயலாளர் நா. பிரேம்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ். பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடாசலபதி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமுருகன், அதிமுக வழக்கறிஞர் கள் இராமகோவிந்தராஜன்,
எஸ் வி சாந்தி, சி ஆனந்தன், ப. சண்முகம்,செல்ல சுகுமார், ந.சிவஞானம், திருவாசகம்,
கொளஞ்சியப்பன், நகர முக்கிய நிர்வாகிகள் தளபதி கணேசன், என் நாகராஜன்,கே கருணாநிதி,
பி. பழனியாண்டி ,புரட்சி.சிவா, ஏ.கே.குமார், உத்தாண்டம் , ஆர்.எஸ்.எம் மணிகண்டன், ஆர் சுரேஷ், ஏ.ஆர்.வி ஹரிகிருஷ்ணன், மாங்காய் கண்ணன்,ஏ.எஸ்.ஏ சிவகுமார், சாக்கோட்டை விக்கி கருப்பையா, ஆஸ்கர் செந்தில், பாலகுரு சண்முகம், ராணா. முருகவேல் ,ஜுவல்லரி ஆர். முருகானந்தம், ஆர் ராஜா ,அண்ணா கார்த்திக்கேயன், கலா தினேஷ் ,எஸ் முகமது இஸ்மாயில்,ஆர் மனிதன் (எ) செல்வகுமார், மகாலட்சுமி கார்த்தி கேயன்,ஆர்.வணக்கம்.பாலு,லெ.மணிகண்டன்,ஸ்டைல் கிங் ரவிச்சந்திரன்,இன்பவள்ளி.
மாரியப்பன், எம்.ஆர் புஷ்பநாதன், மணியாங்குட்டை மூர்த்தி.வேலா வசந்த்,என்.எம். பாலா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *