ரூ.10 கோடி செலவில் குற்றாலநாதர் கோவில் ஊழியர்களுக்கு குடியிருப்பு
1 min read
Housing for the employees of the Courtalanathar Temple at a cost of Rs. 10 crore
27.2.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருள்மிகு திருக்குற்றால நாத கோவிலில் பணி புரியும் ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டும் பணியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆயிரப் பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன்குளம் பகுதியில் அருள்மிகுதிருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கோவில் ஊழியர்களுக்கான குடியிருப்பு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன்குளம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆறுமுகம்,
தென்காசி மாவட்ட உதவி ஆணையர் அபிநிஷா,
அருள்மிகு திருக்குற்றால நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன்
ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீரபாண்டியன், ராமலட்சுமி, சுந்தரராஜன், திருக்குற்றால நாதர் கோவில் அர்ச்சகர்கள் கணேசன், பிச்சுமணி, ஜெயமணி, சுந்தரம், சந்திர சேகர பட்டர், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.ரேகா, ஆயிரப்பேரி ஊராட்சி செயலாளர் ந.ஆறுமுகம், மற்றும் குற்றாலம் திருக் குற்றாலநாதர் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.