June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறுமியிடம் செல்போனை கொடுத்து பாலியல் தொல்லை- முதியவர் கைது

1 min read

Elderly man arrested for sexually harassing girl by giving her cell phone

4.6.2026
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர். அவ்வப்போது கணவர் சமையல் வேலைக்கும் மனைவி விவசாய கூலிக்கும் சென்ற நிலையில் அவர்களது ஆறாம் வகுப்பு பெண் குழந்தையை அதை படைப்பு வீட்டில் கணக்கப் பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (வயது 62 ) சிறுமியை பார்க்க வைத்தும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் பலமுறை மூன்றாண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருமயம் அருகில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இது குறித்து படைப்பு வீட்டில் காவலாளி பணிக்கு தம்பதியினரை வேலைக்கு சேர்த்து விட்ட முருகப்பன் என்பவர் ஏன் சொல்லாமல் வேலையை விட்டு சென்றீர்கள் என்று கேட்டபோது தங்கள் மகளை 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்து (2020-23) மூன்றாண்டுகளாக பலமுறை கணக்குப்பிள்ளை சுப்பிரமணி பாலியல் துன்புறுத்தல் செய்ததால் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தைரியம் கொடுத்த முருகப்பன் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோரை புகார் அளிக்க வைத்தார் மகளிர் காவல் ஆய்வாளர் குற்றவாளி சுப்பிரமணியனிடம் விசாரணை செய்த பொழுது சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *