June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பாஜக பெண் நிர்வாகி புகாரின்பேரில் திருச்சி சூர்யா கைது

1 min read

Trichy Surya arrested on complaint of female BJP official

4.6.2026
தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இவர் சென்னை காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக பாஜக மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி சூர்யா கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?

சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் திருச்சி சூர்யா மற்றும் மற்றொரு யூடியூபரான முக்தார் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியின் போது, அவர்கள் இருவரும் அலிஷா அப்துல்லா மற்றும் அவருடைய குழந்தையைக் குறித்து ஆபாசமான மற்றும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமர்சனங்கள் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
இந்த விவகாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அலிஷா அப்துல்லா, ஒரு பெண்ணாகவும் தாயாகவும் தனக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இந்த அநாகரிக செயலுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.
அந்தப் புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான யூடியூப் நேர்காணல் வீடியோ ஒன்றில், தன்னைப் பற்றியும் தனக்கு பிறந்த பச்சிளம் இரட்டை குழந்தைகளைப் பற்றியும் யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவரும் இணைந்து மிகவும் கொச்சையான, ஆபாசமான மற்றும் தரக்குறைவான அவதூறு கருத்துக்களைப் பேசிப் பதிவிட்டு உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்
இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர் கொள்ள முடிவெடுத்த அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று சைபர் கிரைம் மற்றும் அவதூறு சட்டங்களின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

இதைர அடுத்து, சென்னை காவல்துறை, உடனடியாக வழக்குப் பதிவு செய்து பாஜக முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யாவை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான யூடியூபர் முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தங்களின் Subscribers மற்றும் பார்வைகளையும் (Views) அதிகரிப்பதற்காக பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் ஆபாசமாகப் பேசும் யூடியூப் சேனல்களைக் கண்காணித்து அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. பொதுவெளியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை முன்வைத்து அலிஷா அப்துல்லாவுக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பது நல்லது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கிறது என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *