ஆலங்குளம், கீழப்பாவூர் கோவில் திருப்பணி நிறைவு
1 min read
Alankulam, Geezappavoor Temple Tirupani Completion
1.3.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் பகுதிகளில் திருப்பணி முடிந்த கோயில்களை பால் மனோஜ் பாண்டியன் திறந்து வைத்தார்.
கீழப்பாவூர் ஒன்றியம் முத்துக்கிருஷ்ணப்பேரியிலும், ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி அருள்மிகு அணைக்கரை சுடலை மாடசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட ஆதிதிராவிடர் பகுதிகளில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் தலா இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட திருக்கோயில்களை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.