June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

பூலாங்குளத்தில் ரூ. 20 இலட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா

1 min read

In Phoolangulam Rs. Inauguration of multi-purpose building at a cost of 20 lakhs

1.3.2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூலாங்குளம் ஊராட்சியில் ரூ. 20 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை பி.ஹெச்.பால் மனோஜ் பாண்டியன் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சுப்ரமணியபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 நிதியில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஹெச்.பால் மனோஜ் பாண்டியன் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பூலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரவியகனி குணரத்னம், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஊர் நாட்டாண்மை வீரபாண்டி, நிர்வாகி மகாலிங்கம், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஐந்தாங்கட்டளைஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, அன்பு, சேர்மக்கனி என்ற கணேசன், அருண்குமார், சமூகநல ஆர்வலர் நூருல் அமீர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

-ஜோசப், நிருபர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *