June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை: பிளஸ் 2 தேர்வு எழுதச்சென்ற மாணவி விபத்தில் பலி

1 min read

Madurai: Student dies in accident while writing Plus 2 exams

2.3.2026
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் துர்கா தேவி (வயது 17) இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளச் 2 படித்து வந்தார்.

இந்தநிலையில் மாணவி துர்கா தேவி இன்று பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்காக ஆவியூரிலிருந்து மதுரைக்கு அவரது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அல்லிக்குளம் பகுதியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக துர்கா தேவி வந்த பைக் மீது மோதியது. இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *