June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் தீபத்தூணுக்கு பூஜை செய்ய 5 பேர் குழு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

1 min read

High Court asks Tamil Nadu government to allow a group of 5 people to perform puja at Thiruparankundram hill deepathan

2.3.2026
திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் நாளை மறுநாள் (மார்ச் 4ம் தேதி) தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. உத்தரவை அமல்படுத்தாமல் திமுக அரசு பிடிவாதம் காட்டியது. இதனால், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் என்பவர், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார்.
கடந்த மாதம் 2ம் தேதி வழக்கு விசாரணைக் வந்த போது, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் யெல் அலுவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம் எனவும், கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து கலெக்டர் மட்டும் இன்று( மார்ச் 02) ஆஜராக வேண்ம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதன்படி நீதிபி முன்பு ஆஜரான கலெக்டர் பிரவீன் குமார் ஆஜர் ஆனார்.
அப்போது அவர் தரப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்னை சமாளிக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, தீபத்தூணில் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் நாளை மறுநாள் (மார்ச் 4ம் தேதி) பதில் அளிக்க தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *