June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி இரட்டை கொலை- தலைவர்கள் கண்டனம்

1 min read


Nanguneri killings – Leaders condemn

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன.

“சட்டம் ஒழுங்கு” என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை மெத்தனப்போக்காக

கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது.

திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது

இந்த மு.க.ஸ்டாலின் அரசு. ஆனால், திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது !

இப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.

இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?

சமூக மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து, கொடிய ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடங்கியது. செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜான் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் தற்செயலாக அந்தப் பகுதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலை இதுதான். கடந்த 5 ஆண்டுகளில் 65,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 8000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மாநிலத்தில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தை பாதித்த வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இதேபோல் நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், செல்வபெருந்தகை, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *